நன்றி சொல்லும் நாள்!

-பாரதி காவலர் கே.ராமமூர்த்தி

ஓர் ஆண்டு என்பது 365 நாள்களைக் கொண்டது. சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் 365.25 நாள்கள் என்பதுதான் வானவியல் கணக்கு. வேதகால பாரத வானவியல் சாஸ்திரம் 32 பகுதிகளை ரகஸ்ய வித்தைகளாகக் கொண்டது.

தை மாதம் தொடங்கி ஆனி மாதம் முடிய உள்ள ஆறுமாத காலமும், ஆடி முதல் மார்கழி முடிய உள்ள ஆறுமாத காலமும் சமகால அளவு இல்லை. உத்தராயணம், தக்ஷிணாயணம் ஆறு ஆறு மாதங்கள் என்றாலும் கால வித்தியாசம் உள்ளது.

அதாவது சூரியன் நகர்வதாகத் தோன்றுகிற பயண காலம் வடதுருவமுனைக் கோட்டிலிருந்து தென் துருவமுனைக் கோட்டிற்கு வருகிற காலம் 186.50 நாள்கள். தென் துருவ முனைக் கோட்டிலிருந்து வட துருவ முனைக் கோட்டிற்கு வருகிற காலம் 178.75 நாள்கள். மொத்தம் 365.25 நாள்கள் (ஓராண்டு).

தை தொடங்கி உத்தராயணம் ஆரம்பமாகிறது. தை மாதத்திற்கு தனி விசேஷத்தன்மை உண்டு. பூமியில் வாழும் மானுடருக்கான ஓராண்டு என்பது வானுலக தேவர்களுக்கு ஒரு நாள் பொழுது என்பது மனு ஸ்மிருதியின் வாசகம்.

தக்ஷிணாயணத்தில் ஆடி தொடங்கி மார்கழியின் காலம் தேவர்களின் முன் விடியல். உத்தராயணத்தில் தொடங்குகிற தைமாதம் தேவர்களின் விடியற்காலம். தேவர்களின் விடியலை அதாவது தைமாதத்தை விசுவாமித்திர மகரிஷி போற்றியுள்ளார்.

தேவர்களின் அந்த விடியல்தான் மனிதகுல வாழ்வுக்கு உணவு தருகிற உழவர்களின் தைத்திருநாள். உலகம் முழுவதும் உழவுத் தொழிலை போற்றியுள்ளது.

ரோமானியக் கவிஞர் வெர்ஜில் எழுதியுள்ள 12 பகுதிகள் உடைய  HENEID (ஹெனைட்) காவியம் உழவின் பெருமையைப் பேசும். லத்தீன் மொழியிலுள்ள GEORGUCS (கார்கஸ்) காவியம் உழவுக்காக இயற்றப்பட்டது.

கவிச் சக்கரவர்த்தி கம்பரின் ஏர் எழுபது பிரசித்தம். திருவள்ளுவரும், இளங்கோ அடிகளும் உழவர்களைப் போற்றியுள்ளதை தமிழகம் அறிந்ததே. கம்பன், இளங்கோ, வள்ளுவரைப் போற்றிய மகாகவி பாரதி சுதந்திரப் பாட்டை, பள்ளர்களின் களியாட்டம் என்றே பாடி உழவர்களை உயர்த்தி உள்ளார்.

தை மாதத்தை கொண்டாடுவது, ஒளி தந்த கதிரவனுக்கும் உணவு தந்த உழவர்களுக்கும் நன்றி கூறுவதற்காகவே.கதிரவனை சூரிய நாராயணனாக கருதுவது ஏனென்றால், சூரியனின் பால் வட்டத்தின் மத்தியில் சூரிய நாராயணர் இருப்பதாக பாரத ஸ்மிருதிகள் கூறுகின்றன.

வானில் சூரியனைச் சுற்றி பல கோள்கள் வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன. ஆண்டு முழுவதும், பன்னிரு மாதங்களும் கோள்கள் சுழல்கின்றன. அவ்வாறு கோள்கள் சுழல்கிற பாதைகளும், அவை சந்திப்பதும் ராசிகள் என்பதாகச் சொல்லப்படுகிறது. ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு வருவதை சங்கராந்தி என்று கூறுவது வழக்கம்.

மகர ராசி என்று சொல்லப்படுகிற பாதைக்கு கதிரவன் நெருங்குவதை மகர சங்கராந்தி என்று புராணங்களில் கூறியுள்ளார்கள். அதையே தைப்பொங்கல் திருநாள் என்பது மரபு. உணவு தந்த கதிரவனுக்கும் உழவனுக்கும் பொங்கலைத் தந்து மகிழும் நாளே மகர சங்கராந்தி – தைத் திருநாள்.

வான் மழைக்கும், வளம் மிகுந்த பூமிக்கும், ஒளி தரும் சூரியனுக்கும், இயற்கையுடன் பாடுபட்ட விவசாயிக்கும் மனிதகுலம் கொண்டாடுகிற நன்றித் திருநாள், தெய்வத் திருநாள், புராணத் திருநாள், வானவியலைப் போற்றும் பெருநாள் என்பதை உலகுக்குத் தெரிவிக்கிற பாரத ஸம்ஸ்கிருதியின் (கலாசாரத்தின்) சின்னமே தைத் திங்கள் பொங்கல் ஆகும்.

நமது முன்னோர்கள் விஞ்ஞான ரீதியான – வானவியல் ரீதியான நுட்பங்களைக் கண்டறிந்து நமக்கு வழங்கி உள்ளார்கள்.

ஆனால், அனேகமாக எல்லாவற்றையும் தெய்வீகம் } வேதம் } இதிகாசம் } புராணம் என்ற அடிப்படையில் கூறியிருக்கிறார்கள் என்கிற பேருண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். எதையும் மேலோட்டமாகக் கண்டு, பாரத நாட்டு தெய்வீகத்தை, வேத இதிகாச புராணத்தை அறிவியல் குறைத்து பேசுகிற அரசியல் ஒன்றுக்குமே நிலைக்காது.

மஞ்சள் குலைகளும், இஞ்சிக் குலைகளும், கரும்புகளும், பசுக்களும் மாட்சியுடன் பவனிவர, இயற்கையைத் தொழுது போற்றி உணவளித்த சாதாரண மானுடர்க்கு நன்றி பாராட்டி பால் பொங்க, அரிசி பொங்க, மனம் பொங்கிப் பொங்கித் ததும்பும் நாளே தைப் பொங்கல்.

பாரத நாட்டு மகரிஷிகளும், வானவியல் விற்பன்னர்களும் கண்ட நுட்பங்களின் பாண்மைகள் நிறைந்த மேன்மைகளே பாரத நாட்டு விசேஷப் பண்டிகைகளும் திருநாட்களும் என்கிற சத்யங்களைப் புரிந்து கொண்டு வேதங்கள் சொன்னபடி மனிதரை மேன்மைப்படுத்திக் கவிபாடிய பாரதியின் வாசகமான  ‘வானவியல் தேர்ச்சி கொள்’ என்ற புதிய ஆத்தி சூடியை உணர்ந்து நடப்போம்.

தினமணி (14.01.2014)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s