கல்லூரி ஆசிரியர் கருத்தரங்கு – படத்தொகுப்பு

ஈரோடு மாவட்டம், துடுப்பதியில் உள்ள ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரியில் கடந்த 16.11.2013, சனிக்கிழமை, காலை 9.00 மணி முதல் மதியம் 2.30 மணி வரை கல்லூரி ஆசிரியர் கருத்தரங்கு நடைபெற்றது.
.
சுவாமி விவேகானந்தர் 150 ஜெயந்தியை முன்னிட்டு,  தேசிய சிந்தனைக் கழகமும் ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரியும் இணைந்து இக்கருத்தரங்கை நடத்தின.அதன் புகைப்படப் பதிவுகள் இங்கே…

1Kuththuvilakku1
கருத்தரங்கை குத்துவிளக்கேற்றி துவங்கிவைக்கிறார் கோவை ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயத்தின் உதவி செயலாளர் பூஜ்யஸ்ரீ சுவாமி நிர்மலேஸானந்தர்.
.
2Kuththuvilakku 2
குத்துவிளக்கேற்றுகிறார் தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநில அமைப்பாளர் திரு. ம.கொ.சி.ராஜேந்திரன்.
.
3Kuththuvilakku 3
குத்துவிளக்கேற்றுகிறார் ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரியின் செயலாளர் திரு. சா.சிவானந்தன்.
.
5Principal ravichandran
வரவேற்புரை வழங்குகிறார் ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரியின் முதல்வர் திரு. ஆ.த.ரவிசந்திரன்.
.
6Secy Shivanandhan
வாழ்த்துரை வழங்குகிறார் ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரியின் செயலாளர் திரு. சா.சிவானந்தன்.
.
7Swami Nirmaleshananda
கருத்தரஙகைத் துவங்கிவைத்து, ‘விவேகானந்தரும் இளைஞர்களும்’ என்ற தலைப்பில் உரையாற்றி, ஆசியுரை வழங்குகிறார் பூஜ்யஸ்ரீ சுவாமி நிர்மலேஸானந்தர்.
.
8Audiance 2
கருத்தரங்கில் பங்கேற்றவர்களில் ஒரு பகுதி.
.
9Kuzalenthi
‘விவேகானந்தர் விரும்பிய பாரதம்’ என்ற தலைப்பில் தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலச் செயலாளர் கவிஞர் திரு. குழலேந்தி உரையாற்றுகிறார்.
.
10Pramodhkumar
‘பாரதம் உலகிற்கு அளித்த நன்கொடைகள்’ என்ற தலைப்பில், கோவை அமிர்தா பல்கலைக்கழக உதவி பேராசிரியர் திரு.மா.பிரமோத்குமார் உரையாற்றுகிறார்.
.
11Prof Kanagasabapathi
’இனிவரும் காலம் இந்தியாவின் கைகளில்’ என்ற தலைப்பில் கோவை- தமிழ்நாடு நகரியல் கல்வி மையத்தின் முன்னாள் இயக்குநர் பேராசிரியர் திரு. ப.கனகசபாபதி உரையாற்றுகிறார்.
.
12Prof Kumarasamy
’விவேகானந்தரின் இன்றைய அவசியம்’ என்ர தலைப்பில், சேலம்- பெரியார் பல்கலைக்கழக- விவேகானந்தா கல்வி மையத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினர் பேராசிரியர் திரு.க.குமாரசாமி உரையாற்றுகிறார்.
.
13RPrabakar
நன்றி நவில்கிறார், தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலக் குழு உறுப்பினர் திரு. சேலம் இரா.பிரபாகரன்.
.
14Audiance 1
கருத்தரங்கில் பங்கேற்றோரில் ஒரு பகுதி.
.

இந்நிகழ்வில், பெருந்துறை மருத்துவக் கல்லூரியின் பேராசிரியரும் கண் மருத்துவருமான  டாகடர் திரு.எம்.எல்.ராஜா, ‘விவேகானந்தரும் விஞ்ஞானமும்’ என்ற தலைப்பில் பேசினார்..

கருத்தரங்கில் 6 கல்லூரிகளிலிருந்து 150-க்கு மேற்பட்ட ஆசிரிரியர்களும் மாணவர்களும் கலந்துகொண்டனர். தேசிய கீதத்துடன் கருத்தரங்கம் இனிதே நிறைவடைந்தது.
.

Advertisements

நிவேதனம் நூல் வெளியீடு

தேசிய சிந்தனைக் கழகம் சார்பில் தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று நிவேதனம் நூல் வெளியிடப்பட்டுள்ளது.

48 பக்கங்கள் கொண்ட இந்த நூலில், நமது நாட்டின் ஆன்றோர் பெருமக்களின் திருநட்சத்திரங்களும், அவதார தினங்களும் தொகுக்கப்பட்டுள்ளன அதேபோல நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வீரர்கள், சமூக சீர்திருத்தவாதிகள், விஞ்ஞானிகள் உள்ளிட்ட சான்றோரின் பிறந்த, நினைவு தினங்களும் தொகுக்கப்பட்டுள்ளன.

மேலும், சுவாமி விவேகானந்தரின் வாழ்வில் நடைபெற்ற நிகழ்வுகள் தேதி வாரியாகப் பட்டியலிடப்பட்டுள்ளன. இதனை நண்பர் திரு. செங்கோட்டை ஸ்ரீராம் தொகுத்திருக்கிறார்.

இவை மட்டுமல்லாது, சுவாமி விவேகானந்தரின்  150வது ஜெயந்தியை முன்னிட்டு, சுவாமிஜி குறித்த நான்கு கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன.

ஆய்வாளர் திரு. அரவிந்தன் நீலகண்டன் எழுதிய “சுவாமி விவேகானந்தரும் அம்பேத்கரும்’  என்ற கட்டுரை, பேராசிரியர் திரு. ப.கனக சபாபதி எழுதிய ‘சுவாமி விவேகானந்தரின் இன்றைய அவசியம்’ கட்டுரை, பத்திரிகையாளர் திரு.வ.மு.முரளி எழுதிய ‘ஒரு பாறையின் மகத்தான சரித்திரம்’ கட்டுரை, தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநில அமைப்பாளர் திரு. ம.கொ.சி.ராஜேந்திரன் எழுதிய ‘விவேகானந்த சுடரை நாடெங்கும் ஏற்றுவோம்’ கட்டுரை ஆகியவை இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

இந்நூலுக்கு மதுரை ராமகிருஷ்ன மடத்தின் தலைவர் பூஜ்யஸ்ரீ சுவாமி கமலாத்மானந்தர், கோவை ராமகிருஷ்ண  வித்யாலயத்தின் செயலாளர் பூஜ்யஸ்ரீ சுவாமி அபிராமானந்தர், வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரமத்தின் தலைவர் பூஜ்யஸ்ரீ சுவாமி சைதன்யானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் பத்திரிகையின் ஆசிரியர் பூஜ்யஸ்ரீ சுவாமி விமூர்த்தானந்தர், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மூத்த தலைவர் திரு. சூரிய நாராயண ராவ் ஆகியோர் ஆசியுரை வழங்கி உள்ளனர்.

இந்நூலின் விலை: ரூ. 15.00

இந்த நூலைப் பெற
திரு. ம.கொ.சி.ராஜேந்திரன் (90031 40968)
அவர்களை தொடர்பு கொள்ளவும்.

12 மணிநேரம் நடைபெற்ற சுதந்திர தினத் திருவிழா

தேசிய சிந்தனைக் கழகம் திருப்பூரில் உள்ள பல்வேறு அன்மைப்புகளுடன் இணைந்து இந்த ஆண்டு சுதந்திர தினத் திருவிழாவை சிறப்பாக கொண்டாடியது.
இந்நிகழ்வில் தேசிய சிந்தனைக் கழகத்தின் திருப்பூர்  நகரத் தலைவர் திரு. அரிமா எம் ராமகிருஷ்ணன் அவர்களும் ஆலோசகர் குழலேந்தியும் பங்கேற்றனர்.

இவ்விழா குறித்த செய்தித் தொகுப்பு இது…. 

(நன்றி: IDCC அமைப்பின் ‘சுதந்திரம் காப்போம்’ வலைப்பூ)


——————————————————
சுதந்திர தினத் திருவிழாவில் பேசுகிறார் தேசிய கல்விக் கழகத்தின் முன்னாள் செயலர் திரு. கிருஷ்ண ஜெகநாதன்.

 சுதந்திர தின விழாவை சம்பிரதாயமான விழாவாகக் கொண்டாடாமல், புத்துணர்ச்சி ஊட்டும் வகையிலும் ஆக்கப்பூர்வமாகவும் கொண்டாட திருப்பூர் சுதந்திர தினத் திருவிழா ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்தது. இதற்கென 50க்கு மேற்பட்ட பொதுநல அமைப்புகள் தொடர்பு கொள்ளப்பட்டன. அனைவரது உதவி, ஒத்துழைப்புடன் சுதந்திர தினத் திருவிழா ஆக. 15 ,  புதன்கிழமை, திருப்பூர், டவுன்ஹாலில் சிறப்பாக நடந்தேறியது. அந்த விழாவின்  நிகழ்வுகளின் சுருக்கமான தொகுப்பு இது:

தேசியக் கொடியேற்றம்:

காலை 9 மணியளவில் டவுன்ஹாலில் அமைக்கப்பட்டிருந்த 30 அடி உயர கொடிக்கம்பத்தில் தேசியக் கொடியேற்றும் நிகழ்வுடன் விழா துவங்கியது. இந்நிகழ்ச்சிக்கு திருப்பூர் ஏற்றுமதி பின்னலாடை உற்பத்தியாளர சங்கத்தின் தலைவர் K.P.G. கோவிந்தசாமி தலைமை வகித்தார்.

D.K.T. கல்வி நிறுவனங்களின் தலைவரும் தொழிலதிபருமான ‘லிங்க்ஸ்’ D.சவுகத் அலி, காந்திய மக்கள் இயக்கத்தின் திருப்பூர் மாவட்டத் தலைவர் A. ராதாகிருஷ்ணன், திருப்பூர் டம்பிள் டிரையர் சங்கத்தின் தலைவர் தாமு.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருப்பூரைச் சேர்ந்த முதுபெரும் சுதந்திரப் போராட்ட வீரரும் (வயது: 88) அனைத்திந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் சமிதியின் செயல் தலைவருமான தியாகி G.முத்துசாமி அய்யா தேசியக் கொடியேற்றி வைத்தார்.

அடுத்து டவுன்ஹாலில் விழா துவக்க நிகழ்ச்சி நடந்தது. செங்கோட்டையில் பட்டொளி வீசிப் பறக்கும் தேசியக் கொடி மேடையின் பின்புறத்தை அலங்கரித்தது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்கள் தங்கள் சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.

தொழிலும் பொருளாதாரமும்- கருத்தரங்கம்:

அடுத்து காலை 9.30 மணியளவில் முதல் கருத்தரங்கம் துவங்கியது. திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் M.P.முத்துரத்தினம் தலைமை வகித்தார். திருப்பூர் சாய ஆலை  உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் S.முருகசாமி முன்னிலை வகித்தார். திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழுவின் செயலாளர் T.R. விஜயகுமார், தொழிலதிபர் ஆர்ம்ஸ்டிராங் பழனிசாமி ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

திருப்பூர் நிப்ட்-டீ கல்லூரியின் தலைவரும் வார்சா ஏற்றுமதி நிறுவனத் தலைவருமான ராஜா சண்முகம், கோவையில் உள்ள தழ்நாடு நகரில் பயிற்சி மையத்தின் இயக்குனர் பேராசிரியர் ப.கனகசபாபதி ஆகியோர் கருத்துரை வழங்கினர். கருத்தரங்கின் இறுதியில் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு இருவரும் பதில் அளித்தனர்.

காண்க:

1 . பனியன் தொழிலில் உள்முகக் கோளாறுகளை சரி செய்ய வேண்டும்- ராஜா சண்முகம்.

2 . கலாசாரம் சார்ந்த பொருளாதாரத்தால்  இந்தியா முன்னேறி வருகிறது- பேராசிரியர் ப. கனகசபாபதி

இளம் சிறுவனின் இனிய இசை நிகழ்ச்சி:

அடுத்து ‘வளரும் செல்வன்’ சு.மகிழன் பரிதி குழுவினரின் தேசபக்திப் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. மூன்றாம் வகுப்பு படிக்கும் மகிழன் பரிதி தனது மழலை கலந்த இனிய பாடல்களால் அனைவரையும் வசீகரித்தான். இந்நிகழ்ச்சிக்கு திருப்பூர் சண்முகானந்த சங்கீத சபாவின் தலைவர் வழக்குரைஞர் V.வீரராகவன் தலைமை வகித்தார். திருப்பூர் குர்பானி அறக்கட்டளை செயலாளர்  M. அகமது பைசல் முன்னிலை வகித்தார். 

இதனிடையே, மேகலா குழும நிறுவனங்கள் அனைவருக்கும் தேநீர் வழங்கினர்.

இயற்கை வளங்களும் சுகாதாரமும் – கருத்தரங்கம்:

அடுத்து பகல் 12 மணியளவில் இரண்டாவது கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழுவின் தலைவர் R. அண்ணாதுரை தலைமை வகித்தார். கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் தலைவர் N.S.பழனிசாமி முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்வில், ஈரோட்டைச் சேர்ந்த தமிழக பசுமை இயக்கத் தலைவர் டாக்டர் வெ. ஜீவானந்தம், திருமானூரைச் சேர்ந்த இயற்கை வாழ்வியல் இயக்கத்தின் தலைவர் டாக்டர் அ.காசிப்பிச்சை ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

அடுத்து திருப்பூர் – தென் இந்திய பின்னலாடை உற்பத்தியாளர் சங்கம் அனைவருக்கும் மதிய உணவு வழங்கியது.

காண்க:

‘இயற்கையைச் சார்ந்து வாழ்வதே சுகாதாரம்’

கண்கவர்ந்த கலைநிகழ்ச்சிகள்:

உணவு இடைவேளைக்குப் பிறகு, மதியம் 2.15 மணியளவில், பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  இந்நிகழ்வுக்கு தமிழ்நாடு அரசு ஹோமியோபதி மருத்துவர் சங்கத்தின் தலைவர் டாக்டர் K.கிங் நார்சியஸ் தலைமை வகித்தார்.  திருப்பூர் இன்னர்வீல் சங்கத்தின் முன்னாள் தலைவர் ராஜாத்தி சந்தானகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

முதல் அரை மணி நேரம் வானவில் அகாடெமி, சிருஷ்டி அகாடெமி ஆகியவற்றின் மாணவர்கள் இசை நிழ்ச்சிகளை  நடத்தினர். அடுத்து K. செட்டிபாளையம் விவேகானந்தா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி  மாணவ மாணவியரின் நாட்டிய நிகழ்ச்சிகள் அரைமணி நேரம் நடைபெற்றன. இந்நிகழ்வுகள் பார்வையாளர்கள் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தன.

அரசியலும் நிர்வாகமும்- கருத்தரங்கம்:

அடுத்து பிற்பகல் 3 .15 மணியளவில் மூன்றாவது கருத்தரங்கம் துவங்கியது. இந்நிகழ்வுக்கு  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர் சங்கத்தின் திருப்பூர் பகுதி தலைவர் R. ஈஸ்வரன் தலைமை வகித்தார். தொழிலதிபர்  ஓகே டெக்ஸ்டைல்ஸ் M.கந்தசாமி முன்னிலை வகித்தார்.

திருப்பூர்  தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் , மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னணி தலைவருமான K. தங்கவேலு கருத்தரங்கில் முதலில் பேசினார். அடுத்து கோவையைச் சேர்ந்த வழக்குரைஞரும், AICCTU தொழிற்சங்கத் தலைவருமான R. லட்சுமண நாராயணன் உரையாற்றினார். பார்வையாளர்களின் கேள்விகளுக்கு இருவரும் கருத்தரங்கின் இறுதியில் பதில் அளித்தனர்.

நிகழ்ச்சியின் இறுதியில் அனைவருக்கும் தேநீர் வழங்கப்பட்டது.

கல்வியும் பண்பாடும்- கருத்தரங்கம்:

அடுத்து மாலை 5 மணியளவில், நான்காவது கருத்தரங்கம் நடைபெற்றது. திருப்பூர் பார்க் கல்வி நிறுவனங்களின் தலைவர் P.V.ரவி தலைமை வகித்தார். திருப்பூர், K. செட்டிபாளையம் விவேகானந்தா மெட்ரிகுலேஷன் பள்ளியின் செயலாளர் எக்ஸ்லான் K. ராமசாமி முன்னிலை வகித்தார்.

தேசிய கல்விக் கழகத்தின் முன்னாள் நிர்வாகியான சிந்தனையாளர் கிருஷ்ண.ஜெகநாதன், கன்னியாகுமரி- விவேகானந்த கேந்திராவில் பணிபுரியும் ஆராய்ச்சியாளரும் எழுத்தாளருமான அரவிந்தன் நீலகண்டன் ஆகியோர் கருத்தரங்கில் பேசினர்.

சேவை உள்ளங்களுக்கு பாராட்டு விழா:

அடுத்து திருப்பூர் வட்டாரத்தில் செயல்படும் சேவை அமைப்புக்களை பாராட்டும் நிகழ்வு இரவு 7 மணியளவில் நடைபெற்றது. திருப்பூரைச் சேர்ந்த பல்வேறு சமூக சேவை அமைப்புகளுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. இதற்கு, திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் S.குணசேகரன் தலைமை வகித்தார். மேகலா நிறுவனங்களின் தலைவர் C.சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.

 இதில், அன்பு இல்லம் (திருமுருகன்பூண்டி), வள்ளலார் இயற்கை நலவாழ்வு அறக்கட்டளை முதியோர் இல்லம் (கரடிவாவி), பாரதி குரு குலம் (அலகுமலை), மகாத்மா காந்தி கருணை இல்லம் (அமராவதிபாளையம்), குர்பானி அறக்கட்டளை, முயற்சி மக்கள் அமைப்பு (திருப்பூர்), காதுகேளாதோர் பள்ளி (முருகம்பாளையம்) ஆகிய சமூக சேவை அமைப்புகளை கௌரவித்து நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

சுதந்திர தின விழாவையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தென்னிந்திய பின்னலாடை உரிமையாளர் சங்க செயலாளர் எம்பரர் V.பொன்னுசாமி பரிசுகளை வழங்கினார்.

காண்க:

1 .சுதந்திர தின விழாவில் சேவை அமைப்புகளுக்குப் பாராட்டு

2 . போட்டிகளில் வென்ற மாணவ மணிகள் பட்டியல்

நாட்டிய நாடகம்:

அடுத்து இரவு 7 .30 மணியளவில், அருள்புரம் ஜெயந்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளின் நாட்டிய நாடகம் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு தேசிய சிந்தனைக் கழகத்தின் திருப்பூர் பகுதி தலைவர் அரிமா M ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். முன்னாள் ராணுவ வீரர் கூட்டமைப்பின் திருப்பூர் மாவட்டத் தலைவர் அருள்நிதி T R முரளிதரன் முன்னிலை வகித்தார்.

புறநானூற்று தமிழ்ப் பெண்ணின் வீரத்தையும் தன்மானத்தையும் விளக்கும் ‘வீரத்தாய்’ நாட்டிய நாடகம் பார்வையாளர்களால் கரகோஷத்துடன் வரவேற்கப்பட்டது.

விழா நிறைவு நிகழ்ச்சி:

இரவு 7 .50 மணியளவில் சுதந்திர தினத் திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சி துவங்கியது. தி சென்னை சில்க்ஸ் நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் K.பரஞ்சோதி தலைமை வகித்தார். திருப்பூர் திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சக்தி M.சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்வில், ஈரோடு பாரதி வாசகர் வட்டத்தின் செயலாளர் சு.சண்முகவேல் எழுதிய ‘விவசாயிகளைப் பாதுகாப்போம்’ என்ற நூல் வெளியிடப்பட்டது. திருப்பூர் நேஷனல் சில்க்ஸ் உரிமையாளர் N.அருணாசலம் நூலை வெளியிட, சக்தி M.சுப்பிரமணியம் அதைப் பெற்றுக் கொண்டார். திருப்பூர்  இளைஞர் T.A.ஷான் தயாரித்த ‘தேசபக்திப் பாடல்கள்’ குறுந்தகடும் இந்நிழ்வில் வெளியிடப்பட்டது.

விழா நிறைவாக, ‘தினமணி’ நாளிதழின் ஆசிரியர் K. வைத்தியநாதன் விழா பேருரையாற்றினார். முன்னதாக, சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி முத்துசாமி- அவரது மனைவி மயிலம்மாள் தம்பதியினரை தினமணி ஆசிரியர் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.

காண்க:
 

அடிமை மனோ நிலையிலிருந்து விடுபட வேண்டும்! – ‘தினமணி’ ஆசிரியர்

      தேசிய கீதத்துடன் விழா இரவு 9.15 மணியளவில் இனிதே நிறைவடைந்தது.

காலை முதல் இரவு வரை சுமார் 12 மணிநேரம் நடைபெற்ற இவ்விழாவில் திருப்பூர் பகுதியைச் சேர்ந்த மக்களும், பல்வேறு இயக்கங்களைச் சார்ந்தோரும் திரளாகக் கலந்துகொண்டனர். இவ்விழா சிறக்க உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும், அமைப்புகளுக்கும் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.