‘விவேகானந்தம்150.காம்’ துவக்கம்

பிரியமான சகோதர, சகோதரிகளுக்கு,

 வணக்கம்!
.
நமது பாரத தேசத்தின் பெருமைகளையும் பாரம்பரியமான நமது கலாச்சாரத்தின் உயர்வினையும் உலகுக்கு அறிவித்த சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த ஆண்டு விழாவை ஒட்டி, தேசிய சிந்தனைக் கழகம், விவேகானந்தம் 150.காம் என்ற இணைய தளத்தைத் துவங்கி உள்ளது.

.
சுவாமி விவேகானந்தரின் பன்முகப் பரிமாணங்களையும் சிந்தனைகளையும் வெளிப்படுத்தும் வண்ணம், தினசரி இந்தத் தளத்தில் படைப்புகள் வெளியாகும்.
.
தவிர, நாடு  முழுவதும் நடைபெற உள்ள விவேகானந்தர் 150-வது ஆண்டுவிழா குறித்த முக்கிய செய்திகள் மற்றும் நிகழ்வுகள் பற்றிய தொகுப்புகளும் இத்தளத்தில் இடம்பெறும்.
.
இந்தத் தளம், விவேகானந்தரின் 150-வது ஆண்டு விழா தருணத்தில் நாங்கள் சமர்ப்பிக்கும் நறுமலர்களைத் தொடுத்த  மாலையாக மணம் பரப்பும் என்று கருதுகிறோம்.
.
இத்தளத்துக்கு தங்களது  ஆதரவினையும் ஒத்துழைப்பையும் அன்புடன் எதிர்பார்க்கிறோம்.
.
 வணக்கம்! வந்தே மாதரம்!
.
புதிய இணையதளத்தின் முகவரி:   http://www.vivekanandam150.com
.
என்றும் தேசியப் பணியில்,
ம.கொ.சி.ராஜேந்திரன்.
மாநில அமைபாளர்,
தேசிய சிந்தனைக் கழகம்
சென்னை.